search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அட்லெடிகோ மாட்ரிட்"

    லா லிகாவில் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் கேப்டன் காடின் வெளியேற இருப்பதாக தெரிவித்துள்ளார். #Godin
    லா லிகாவில் விளையாடும் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்று அட்லெடிகோ மாட்ரிட். இந்த அணியில் கடந்த 9 வருடமாக விளையாடி வருகிறார் டியேகோ காடின். இவரது ஒப்பந்தம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. அத்துடன் அணியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.

    33 வயதாகும் காடின் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கு கடந்த 2010-ல் வில்லாரியல் அணியில் இருந்து டிரான்ஸ்பர் ஆனார். இதுவரை 387 போட்டிகளில் விளையாடி 27 கோல்கள் அடித்துள்ளார். 2014-ம் ஆண்டு பார்சிலோனாவுக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என டிரா செய்து கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.



    காடின் இதுவரை எந்த அணிக்கு செல்ல இருக்கிறார் என்பதை தெரிவிக்கவில்லை. ஆனால், இத்தாலி செர்ரி ஏ அணியான இன்டர் மிலன் அணிக்கு செல்லலாம் எனக் கூறப்படுகிறது.
    இரண்டு ஹெட்டர், ஒரு பெனால்டி என ஹாட்ரிக் கோல் அடித்து யுவான்டஸ் அணியை காலிறுதிக்கு அழைத்துச் சென்றார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
    கிளப் அணிகளுக்கு இடையிலான யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு அணிகளும் தலா ஒருமுறை அந்தந்த அணிகளின் சொந்த மைதானத்தில் மோத வேண்டும்.

    அதன்படி யுவான்டஸ் - அட்லெடிகோ மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான முதல் லெக் ஆட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் அட்லெடிகோ அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இதில் அட்லெடிகோ 2-0 என யுவான்டஸை வீழ்த்தியிருந்தது. ரொனால்டோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 2-வது லெக் யுவான்டஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மூன்று கோல்கள் அடித்தால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் யுவான்டஸ் களம் இறங்கியது.

    சொந்த மைதானத்தில் விளையாடியதால் ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு அளித்தனர். இதனால் யுவான்டஸ் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தின. பந்து யுவான்டஸ் வீரர்கள் கால்களுக்கு இடையிலேயே சுழன்று சுழன்று வந்தது. அடிக்கடி அட்லெடிக் மாட்ரிட் கோல் கம்பத்தை நோக்கி பந்து சென்றது. என்றாலும் கோல் விழவில்லை.

    இறுதியாக ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி அற்புதமாக கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் யுவான்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் 4-வது நிமிடத்தில் அதாவது, ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி மேலும் ஒரு கோல் அடித்தார்.



    இதனால் யுவான்டஸ் 2-0 என முன்னிலைப் பெற்றது. இரண்டு லெக்கிலும் சேர்த்து 2-2 என இரு அணிகளும் சமமாக இருந்ததால், கோல்கள் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் யுவுான்டஸ் மிகவும் கவமான செயல்பட்டது. ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் யுவுான்டஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை சரியான பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார்.

    கிறிஸ்டியோனோ ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் யுவான்டஸ் 3-2 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் நான்கு நிமிடங்கள் மிகச்சிறந்த வகையில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. அட்லெடிகோ மாட்ரிட் அணியால் கோல் ஏதும் அடிக்க முடியாததால் யுவான்டஸ் 3-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
    சூப்பர் கோப்பை கால்பந்தில் ரியல் மாட்ரிட்டை 4-2 என வீழ்த்தி அட்லெடிகோ மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது. #RealMadrid #AtleticoMadrid
    சூப்பர் கோப்பை கால்பந்து சாம்பியனுக்கான ஆட்டம் எஸ்டோனியாவில் நேற்று நடைபெற்றது. இதில் ஐரோப்பிய சாம்பியன் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணியும், ஐரோப்பா லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற அட்லெடிகோ மாட்ரிட் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

    ரியல் மாட்ரிட் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறியதற்குப் பிறகு முதன்முறையாக மிகப்பெரிய தொடரை சந்தித்து. ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் அட்டிலெடிகோ மாட்ரிட் அணியின் டியேகோ கோஸ்டா முதல் கோலை பதிவு செய்தது. 27-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கரிம் பென்சிமா பதில் கோல் அடித்தார்.



    இதனால் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் 1-1  என சமநிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும், ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி செர்ஜியோ ரமோஸ் கோல் அடித்தார். 79-வது நிமிடத்தில் டியேகோ கோஸ்டா கோல் அடித்தார். இதனால் 2-2 என ஸ்கோர் சமநிலைப் பெற்றது. கடைசி 11 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

    இதனால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. இதில் 98-வது நிமிடத்தில் அட்லெடிகோ மாட்ரிட்டின் நிகுயெஸ், 104-வது நிமிடத்தில் கோக் ஆகியோர் கோல் அடித்ததால் அட்டிலெடிகோ மாட்ரிட் 4-2 என ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    லா லிகா கால்பந்து தொடர் அணியான அட்லெடிகோ மாட்ரிட் கிரிஸ்மான், லூகாஸ் ஹெர்னாண்டசின் ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளது. #Laliga #AtleticoMadrid
    ஸ்பெயின் நாட்டில் நடத்தப்பட்டு வரும் லா லிகா கால்பந்து தொடரில் பங்கேற்று விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று அட்லெடிகோ மாட்ரிட். இந்த அணியில் பிரான்ஸ் அணியின் முன்னணி வீரர்களான கிரிஸ்மான், லூகாஸ் ஹெர்னாண்டஸ் இடம்பிடித்து விளையாடி வந்தனர்.

    கிரிஸ்மான் முன்னணி ஸ்டிரைக்கராக விளங்கி வந்தார். இவர் 2014-ம் ஆண்டில் இருந்து இந்த அணிக்காக விளையாடி வருகிறார். 2017-2018 சீசன் முடிந்த பின்னர், பார்சிலோனா அணிக்கு மாற இருக்கிறார் என்ற பேச்சு வெளியானது.



    இதை முற்றிலும் மறுத்த கிரிஸ்மான், நான் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காகத்தான் விளையாடுவேன் என்று அறிவித்தார். இந்நிலையில் அவருடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளது அட்லெடிகோ மாட்ரிட்.



    அதேபோல் மற்றொரு பிரான்ஸ் வீரரான லூகாஸ் ஹெர்னாண்டசின் ஒப்பந்தத்தை 2024 வரை நீட்டித்துள்ளது. மொனாகோ அணியில் இடம்பிடித்துள்ள தாமஸ் லேமரை 63 மில்லியன் பவுண்டிற்கு விலைபேசியுள்ளது. இவரும் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக விளையாட இருக்கிறார்.
    லா லிகாவில் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காகத்தான் விளையாடுவேன் என்று கிரிஸ்மாமன் உறுதிப்படுத்தியுள்ளார். #Laliga #AtleticoMadrid
    பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் கிரிஸ்மான். 27 வயதாகும் இவர் 2009 முதல் 2014 வரை சுமார் ஐந்து வருடங்கள் ரியல் சோசியேடாட் அணிக்காக விளையாடினார். அதன்பின் 2014-ல் சீசனுக்குப் பிறகு அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கு மாறினார். கடந்த நான்கு வருடங்களாக அந்த அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 142 போட்டிகளில் விளையாடி 79 கோல்கள் அடித்துள்ளார்.

    கடந்த வருடத்தில் இருந்தே கிரிஸ்மான் மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கு மாறப்போவதாக செய்தி வந்தது. இதை கிரிஸ்மான் திட்டவட்டமாக மறுத்தார். தற்போது பார்சிலோனா அணிக்கு மாற இருப்பதாக செய்திகள் உலா வந்தனர். ஆனால் அட்லெடிகோ மாட்ரிட் அணியில்தான் நீடிப்பார் என்று அந்த அணி கூறி வந்தது.



    இந்நிலையில் நான் பார்சிலோனா அணிக்கு மாறப்போவதில்லை. அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காகத்தான் விளையாடுவேன் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ‘‘என்னுடைய ரசிகர்கள், என்னுடைய அணி, என்னுடைய வீடு அட்லெடிகோ மாடரிட்’’ என்று கிரிஸ்மான் தெரிவித்துள்ளார்.
    மார்சைல் அணிக்கெதிரான ஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் 3-0 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. #AtleticoMadrid
    ஐரோப்பா லீக் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்யூ டி மார்சைல் - அட்லெடிகோ டி மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அட்லெடிகோ மாட்ரிட் அணியின் முன்னணி வீரரான கிரிஸ்மான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் கிரிஸ்மான் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் அட்லெடிகோ மாட்ரிட் 1-0 என வெற்றி பெற்றது.

    2-வது பாதி நேரத்திலும் கிரிஸ்மான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார். 89-வது நிமிடம் காபி ஒரு கோல் அடிக்க 3-0 என அட்லெடிகோ டி மாட்ரிட் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.



    கடந்த 2012-ல் அத்லெடிக் பில்பாயோ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் தற்போதுதான் அட்லெடிகோ டி மாட்ரிட் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
    ×